அரசியல்

விலகி புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமா?

நேற்று மாலை 5 மணிக்கு அவசர பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு சென்றாலும் உடன் வரும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வீரர்களுடன் கூடிய வாகனம் அவருடன் வரவில்லை. அதேபோல், அண்ணாமலையின் காரில் பாஜக கொடியும் இல்லை.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம், ‘பாஜகவில் இருந்து விலகுகிறீர்களா? புதிய கட்சி தொடங்கு கிறீர்களா?’ என செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு அனைத்து கேள்விகளுக்கும் 2 நாளில் பதில் அளிக்கிறேன் என்று அண்ணாமலை தெரி வித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக பாஜக பெற்ற வாக்குகளைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button