அரசியல்

ராஜினாமா செய்த நால்வர் குறித்து இலைக் கட்சியில் புதிய ஆலோசனை?

ராஜினாமா செய்த நால்வர் குறித்து இலைக் கட்சியில் புதிய ஆலோசனை?

சமீபத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரம் இன்னும் அடங்காத சூழலில், அதனை எளிதில் விடக்கூடாது என்ற மனநிலையில்தான் இலைக் கட்சி தலைமை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு வாரங்களாக உள்கட்சி பதற்றத்தில் இருந்த இலைக் கட்சி தற்போது மீண்டும் ஒருங்கிணைந்த நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், விசில் சின்னம் கொண்ட கட்சிக்கு ஆதரவாக நகர்ந்த அந்த நால்வர் தொடர்பான பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, தேர்தலில் செய்த செலவுகளை விட அதிகமான அரசியல் மற்றும் நிதி உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் அண்டை மாநிலத்தை சேர்ந்த சில முக்கிய நபர்கள் மூலமாக நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த அரசியல் நகர்வுகளை மத்திய அமைப்புகள் கவனித்து வருவதாகவும், சில முக்கிய அறிக்கைகள் டெல்லி வரை சென்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் அடுத்த கட்டமாக தேசிய அளவிலான அரசியல் எதிர்வினைகள் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதற்கிடையில், கட்சி கொறடா உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் சட்டரீதியான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ராஜினாமா ஏற்ற நடைமுறை மற்றும் அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகும் முயற்சிகளும் ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button