வைரல் செய்திகள்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவுவதுடன், செரிமான மண்டலமும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குகிறது. மேலும் உடல் எடையை கட்டுப்படுத்தவும், தோல் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கோடை காலங்களில் உடல் நீர்ச்சத்து குறைவதை தவிர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தினமும் காலை நேரத்தில் 2 முதல் 3 கப் வரை வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில், ஒரே நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், உடல்நிலை பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button