பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் உயிரிழப்பு: திரையுலகில் அதிர்ச்சி

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான K. Rajan உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று மாலை ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களில் தைரியமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் கே. ராஜன். திரைப்படத் துறையில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேசியதன் மூலம் அவர் தனித்துவமான கவனத்தை பெற்றிருந்தார்.
தயாரிப்பாளராக ‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ உள்ளிட்ட பல படங்களை உருவாக்கியுள்ளார். மேலும் ‘நம்ம ஊரு மாரியம்மா’, ‘உணர்ச்சிகள்’ போன்ற படங்களை இயக்கியதுடன், பல திரைப்படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.
நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ள கே. ராஜன், சமீபத்தில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
— nexttamil.com

