அரசுக்கு எதிராக Social Media மற்றும் Political Circle-ல் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் Vijay தலைமையிலான அரசுக்கு எதிராக Social Media மற்றும் Political Circle-ல் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக Women Safety, Unannounced Power Cut மற்றும் TASMAC Extra Charges போன்ற Issues மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்த Vijay, Law & Order, Drug Issues, Women Security மற்றும் TASMAC-ல் கூடுதல் தொகை வசூல் போன்ற பிரச்சனைகளை முக்கியமாக எடுத்துரைத்திருந்தார். “மாற்றத்திற்கான சின்னம் விசில்” என்ற Campaign Slogan-மும் பெரிதாக பேசப்பட்டது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரங்களுக்கு அருகில் ஆன பிறகும், பல முக்கிய பிரச்சனைகளில் Visible Action தெரியவில்லை என Opposition Parties குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. குறிப்பாக DMK மற்றும் AIADMK Supporters, இணையத்தில் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவையில் நடந்த சிறுமி கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், Women Safety குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதேபோல் Chennai உள்ளிட்ட பல பகுதிகளில் Night Time Power Cut தொடர்வதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் TASMAC Shops-ல் MRP-ஐ விட கூடுதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுவதாக Social Media-வில் பல புகார்கள் Viral ஆகி வருகின்றன. இந்த விவகாரங்களில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
“மாற்றத்திற்கான விசில்” தற்போது “மாடர்ன் சங்கு” போல மாறிவிட்டது என இணையத்தில் Memes மற்றும் Troll Posts பரவி வருகின்றன. இருப்பினும், புதிய அரசு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், சில காலம் காத்திருக்க வேண்டும் என தவெக ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.



