மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

பாரதிராஜா
கலையுலகில் மாபெரும் சாதனைகளையும், மிகப்பெரிய புரட்சியையும் செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, கிழக்கு சீமையிலே போன்ற பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து சென்றுள்ளன. இன்று வரை இவர் எடுத்த திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன.இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் பங்காற்றியுள்ளார். ராக்கி, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், திருச்சிற்றம்பலம் என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியொரு மாபெரும் கலைஞன் இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று உடல்நல குறைவால் காலமானார். இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாரதிராஜாவின் உடலுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். மேலும், பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து பணியாற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.



