வைரல் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிலேயே திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது

இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டிலேயே திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. சன் டிவியில் தொடர்ந்து 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

காலை 9.30 மணிக்கு குடும்ப உணர்வுகளை அழகாக சொல்லும் ‘பிரியமான தோழி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மாதவன், ஜோதிகா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்துள்ள இந்த படம் குடும்ப ரசிகர்களின் மனதில் இன்னும் இடம்பிடித்திருக்கிறது.

அதனை தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த மிகப்பெரிய ஹிட் திரைப்படமான ‘வைகுண்டபுரம்’ ஒளிபரப்பாக உள்ளது. ஆக்ஷன், காமெடி, பாடல்கள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

மாலை 6.30 மணிக்கு தளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சமந்தா, ஏமி ஜாக்சன் மற்றும் மகேந்திரன் நடித்துள்ள இந்த படம் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாகும்.

இதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சன் டிவியில் குடும்பத்துடன் ரசிக்க சூப்பரான திரைப்படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button