டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்படுகிறது. எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்குள் அபிஷேக் சர்மா குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.