காங்கிரஸ் ஆசைக்கு ஆப்பு…..

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையான ஆட்சியில் பங்கு என்பதற்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என கூறியுள்ளார்.எதிர்கட்சிகள் எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுக வெற்றி பெறும், 200 தொகுதியை தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.  ராகுல் காந்தி அரசியலமைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார். நானும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக அவரை பார்ப்பதாக தெரிவித்தார்.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என காங்கிரஸ் கட்சிக்கே தெரியும். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் திட்டமிட்டு பரப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *