தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி இருந்தாலும், பல மாற்றங்களை செய்து சற்று வித்தியாசமான திரைக்கதையில் இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் தரணி.விஜய்யின் திரை வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் கில்லி கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை ரீ-ரிலீஸான படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.