ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

நாட்டிற்காக ரத்தம் சிந்திய ஒரு குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, தனது தாத்தாவான முன்னாள் முதலமைச்சர் பியான்ட் சிங்கை இழந்தவர் ரவ்னீத் சிங் என்றும், எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவரையும் இப்படி முத்திரை குத்துவது தவறானது எனவும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனம் சீக்கிய சமூகத்தினர் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாடாளுமன்ற விவாதம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும், கண்ணியமான மொழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *