புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க தவெக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.