பலமுறை மனு அளித்தும் பலனில்லை – தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.

விளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுவளவு பகுதியில் 60க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், வரும் பேரவை தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் பேனர் வைத்தனர்.

 

இதனிடையே இப்பகுதியில் உள்ள சாலை தனியாருக்கு சொந்தமானது என்பதால் இங்கு சாலை அமைப்பதில் சிக்கல் உள்ளதாக வட்டாட்சியர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *