செய்தியாளர் குறித்தும் அவதூறாக பேசிய மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த மே 17 இயக்கம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் அந்த நிறுவனம் குறித்து திருமுருகன் காந்தி அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அரசியலிலும், வாழ்விலும் திருமுருகன் காந்தி ஒரு பொருட்டே இல்லை என கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த இடம் பத்திரிகையாளர் மன்றம் என்பதால், இனிவரும் காலத்தில் திருமுருகன் காந்திக்கோ, அவர் சார்ந்த இயக்கத்திற்கோ செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.