செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது என்ற ஒரே அளவுகோல் மட்டுமே தேர்தல் வெற்றியை பெற்றுத் தராது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டான சம்பவம் இப்போது நடந்துள்ளது. தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கொடுக்கிறார்கள் என்றவுடன், நேரிலும், ஆன்லைனிலும் சுமார் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தவெகவினரால் வாங்கப்பட்டன. ஆனால், திரும்ப வந்தது என்னவோ வெறும் 5 ஆயிரம் தான்.