டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

டெல்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகினர்.சம்பவம் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், கடந்த நவம்பா் 9-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில்
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு தொடா்பிருப்பதாக கூறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *