தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது என டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
10ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உரிய சலுகைக்கள் வழங்க வேண்டும், தொகுப்பூதியம் முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக போராட்டடக்குழுவினர் டாஸ்மாக் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளதாக போராட்ட குழு தெரிவித்துள்ளது.