இப்போதும் கதையில் வில்லன் குணசேகரன் குண்டாஸ் சட்டம் போட்டும் ஜம்முனு எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் தப்பிக்க நியாயமாக இருந்தாலும் எப்போதும் பெரிய சிக்கலில் சிக்கி தவித்து கொடுமை அனுபவிக்கிறார் ஜனனி.
இப்படி போகும் கதை மிகவும் வருத்தம் அடைய வைப்பதாக பல பெண்கள் கமெண்ட் செய்துவிட்டார்கள், ஆனால் இயக்குனர் கதையை மாற்றுவதாக தெரியவில்லை.
குட் நியூஸ்
இரண்டாம் பாகத்தை தாண்டி முதல் பாகத்திற்கு நிறைய பெண்கள் ரசிகர்களாக உள்ளனர், ஏனெனில் அதில் சில நேரங்களில் பெண்கள் எழுச்சிக்கான காட்சிகள் எல்லாம் வந்தன.
இதனால் சன் தொலைக்காட்சி முதல் பாகத்தை மறுஒளிபரப்பு செய்து வந்தார்கள், ஆனால் ஏதோ காரணங்களால் சில வாரம் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் முதல் பாகத்தை வரும் திங்கள் முதல் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுஒளிபரப்பு செய்ய உள்ளார்களாம்.